அ.தி.மு.க.வுக்கு ஹாட்ரிக் வெற்றி நிச்சயம்… செருப்பு போடாமல் எடப்பாடி தேர்தல் பிரசாரம்.

ஜெயலலிதா பாணியில் புயல் வேகத்தில் முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியிருப்பதைக் கண்டு, அ.தி.மு.க.வினர் உற்சாக வெள்ளத்தில் மிதக்க, எதிர்க் கட்சியினரோ ரொம்பவே நொந்துபோயுள்ளனர்.


அடுத்த பெரிய சோரகை கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கு திரண்டிருந்த பெரும் கூட்டத்தினரிடையே பிரச்சாரத்தைத் தொடங்கினார் எடப்பாடி. சாமி தரிசனத்திற்காக செருப்புகளை கழற்றி போட்டிருந்த அவர், தரிசனத்திற்கு பின்னர் மக்களைப் பார்த்த உற்சாகத்தில் வெறும் காலுடனேயே நடக்கத் தொடங்கினார். 

இதைக் கண்டு உடனே செருப்பு மாட்டிக்கொள்ளும்படி சிலர் கேட்டும், அதனை கண்டுகொள்ளாமல் கூட்டத்தைக் கண்டு மெய்மறந்து பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இந்த இயல்பு, எளிமைதான் எடப்பாடியாருக்கு பெருமை சேர்க்கிறது என்று லோக்கல் கட்சியினரும் பொதுமக்களும் மனதாரப் பாராட்டுகின்றனர். 

இதுகுறித்துப் பேசும் அ.தி.மு.க.வினர். அம்மா மறைவுக்கு பிறகு இனி கட்சியும், ஆட்சியும் அவ்வளவுதான் என எண்ணினோம். ஆனால் காலம் அருட்கொடையாக வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்கள் எண்ணங்களை முழுமையாக மாற்றிவிட்டார். அம்மாவிடமிருந்து பெற்ற அரசியல் ஞானத்தை பயன்படுத்தி எவ்வளவோ சோதனைகளுக்கு மத்தியில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றிவிட்டார்.

இப்போது அடுத்தக்கட்டமாக தேர்தல் பிரச்சாரத்தையும் அதிரடியாக தொடங்கியிருக்கிறார். அவரது பொங்கல் பரிசு திட்டம் எல்லா தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்காக எடப்பாடிக்கு எல்லோரும் இதயபூர்வமாக நன்றி செலுத்துகின்றனர். எடப்பாடியை பொதுமக்கள் முதல்வராகவே பார்க்கவில்லை.

அவரது எளிய அணுகுமுறைகளால் தங்களில் ஒருவராகவே கருதுகின்றனர். சமீபகால தமிழக வரலாற்றில் வேறு எந்தத் தலைவரும் மக்களிடம் இந்தளவிற்கு நெருங்கியதில்லை. இதனால் வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.