அரசுப்பள்ளி மாணவர்கள் படிப்புக்காக அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு… எடப்பாடி பழனிசாமியின் சுழல்நிதித் திட்டம்

அரசுப்பள்ளி மாணவர்களும் இன்று மருத்துவக் கல்லூரியில் நுழைந்து பயில்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் எடப்பாடியார் கொண்டுவந்த, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு என்ற அரசாணைதான்.


இதையடுத்து, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஏனென்றால், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களால் எந்த ஒரு தொகையையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது.

 அதன்படி தற்போது சுயநிதி மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்ட 184 மாணவர்களின் கல்விக்கு ரூ.15.85 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரிகளில் 215 மாணவர்களின் கல்விக்கு 3.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இப்படி, தமிழக மருத்துவ சேவை கழகத்தின் மூலம் உருவாக்கிய சுழல் நிதி மூலம் இக்கல்விக்கட்டணத்தை அரசு செலுத்த உள்ளது. இதனால், எந்த ஒரு காலத்திலும் மருத்துவக் கட்டணம் கட்டுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் அச்சம் அடையத் தேவையே இல்லை.