தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜாதி அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் வைத்து வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலும்,
சமூகநீதியை நிலைநாட்டும் எடப்பாடி பழனிசாமி… ஜாதிக் கணக்கெடுப்புக்கு ஆணையம்

அரசின் பல்வேறு நலத்திட்ட பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எதிர்கொள்ளத் தேவையான புள்ளி விவரங்களை பெறுவதற்காகவும், “தற்போதைய நிலவரப்படியான சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடியார் உறுதி அளித்திருந்தார்.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி சாதிவாரியான அளவிடக்கூடிய புள்ளி விபரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அப்புள்ளி விபரங்களைத் திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. குலசேகரன் அவர்களின் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளார்.
அதன்படி, மாண்புமிகு அம்மா அவர்கள் வழியில் செயல்படும், இவ்வரசு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.