நூலகர்களுக்கு விருதுகள், வெள்ளிப்பதக்கம் வழங்கி கெளரவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 33 நூலகர்களுக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக, 5 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கான நற்சான்றிதழ்கள், வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, கௌரவித்தார்கள்.


பொது நூலகங்களில், நூல்களையும் வாசகர்களையும் இணைக்கும் உன்னதமான பணியினை மேற்கொண்டு வரும் நூலகர்களை கௌரவிக்கும் வகையிலும், நூலகர்களின் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டும், 2001-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறும் நூலக வார விழாவின்போது சிறப்பாக சேவையாற்றும் நூலகர்களுக்கு ``நல்நூலகர் விருது’’ வழங்கப்படுகிறது. 2012-ஆம் ஆண்டு முதல் “நல்நூலகர் விருது’’ என்பதனை பெயர் மாற்றம் செய்து, இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் அவர்களின் பெயரில் “டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது’’ வழங்கப்பட்டு வருகிறது.  

அந்த வகையில், அரசு பொது நூலகங்களில் சிறப்பாக சேவையாற்றியமைக்காக 2020-ஆம் ஆண்டிற்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திருமதி.ந.செசிராபூ (அரியலூர்), திருமதி த.கோமதி (சென்னை), திரு. இரா.தாமோதரன் (கோயம்புத்தூர்), திரு.மு.அருள்ஜோதி (கடலூர்), திருமதி சொ.ஆதிரை (தருமபுரி), திரு.வே.பாஸ்கர் (திண்டுக்கல்), திரு.கு.சதாசிவம் (ஈரோடு), திரு.தி.சுந்தரமூர்த்தி (காஞ்சிபுரம்), திரு.செ.ஜெரால்டு (கன்னியாகுமரி),

திருமதி ப. மணிமேகலை (கரூர்), திரு.சி.பழனி (கிருஷ்ணகிரி), திரு. அ.சுப்பிரமணியன் , திரு.கோ.நாகராஜன் (நாகப்பட்டினம்), திரு.சு.சந்துரு (நாமக்கல்), திரு.வெ.அறிவழகன் (நீலகிரி), செல்வி. அ.தில்ஷாத் (பெரம்பலூர்), திரு.மா.துரைராஜ் (புதுக்கோட்டை), திரு.உ.நாகேந்திரன் (இராமநாதபுரம்), திரு.மா.சந்தோசம் (சேலம்), திரு.வீ.சூரசங்கரன் (சிவகங்கை), திரு.வை.ச.பழனிவேல் (தஞ்சாவூர்), திரு.வெ.பால்ராஜ் (தேனி), செல்வி.அ.தனலெட்சுமி (திருச்சிராப்பள்ளி),

திரு.மா.இரவிச்சந்திரன் (திருநெல்வேலி), திரு.எஸ்.தங்கவேல் (திருப்பூர்), திரு.ச.ஞானப்பிரகாசம் (திருவள்ளூர்), திரு.சி.சிவசங்கரன் (திருவண்ணாமலை), திருமதி ஜெ.குமாரி (திருவாரூர்), செல்வி.மு.பொன்ராதா (தூத்துக்குடி), திரு.க.வேலு (வேலூர்), திரு.கோ.தனுசு (விழுப்புரம்), திரு.சி.வெள்ளைச்சாமி (விருதுநகர்),

திரு.எம்.தமிழ்மணி (சென்னை, கன்னிமாரா நூலகம்) ஆகிய 33 நூலகர்களுக்கு விருதுகளை வழங்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 5 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதிற்கான நற்சான்றிதழ்கள், தலா 50 கிராம் வெள்ளிப்பதக்கங்கள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி, கௌரவித்தார்கள்.