மீண்டும் முதல்வராக வந்து திட்டங்களை நிறைவேற்றுவேன்... எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை

தமிழகத்தில் மே மாதம் புதிய ஆட்சி அமைய இருக்கிறது. மூன்றாவது முறையாக அ.தி.மு.க.வை பதவியில் அமரவைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.


அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் மகத்தான ஆதரவோடு மீண்டும் முதலமைச்சராக வந்து அடிக்கல் நாட்டப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை துவக்கி வைப்பேன்.

விவசாயிகளின் நலனுக்காக குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று எண்ணிலடங்கா திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. எம்ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன. 

வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுகதான். முதலில் கலைஞர், தற்போது ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலின் என குடும்ப அரசியல் செய்து வருகிறார்கள். அவர்கள் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை, வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருகிறார்கள் என்று பேசி இருக்கிறார்.

முதல்வரின் நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும் என்பதுதான் மக்களின் எண்ணமும்.