புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் கைகளால் உணவு பரிமாறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எளிமையைக் கண்டு மக்கள் ஆச்சர்யம்.

முதல்வர் என்றாலே ஏசி அறையில் அமர்ந்துகொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கும் தலைவர் அல்ல, ஏழைகளில் ஒருவர், விவசாயிகளில் ஒருவர் என்று எளிமையைக் கடைப்பிடித்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


அந்த வகையில் இன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை கேட்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் வயல் வெளிகளில் இறங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டு, ஆறுதல் கூறினார்.

பின்னர் புயலால் குடிசைகள் சேதம் அடைந்த மக்களுக்குத் தேவையான பொருள் உதவிகளை வழங்கினார். இதையடுத்து, கன மழையால் பாதிக்கப்பட்டு சிறப்பு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு தன்னுடைய கைகளாலே உணவு பரிமாறினார்.

முதல்வரின் எளிமையைக் கண்டு திருவாரூர் மாவட்டமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது.