தாயின் மரணத்தால் கலங்கிய எடப்பாடி பழனிசாமி.. ஆறுதலுக்கு வந்த அனைத்து கட்சி பிரமுகர்கள்.

மரண வீட்டில்கூட ஒன்றுசேர முடியாத அளவுக்குத்தான் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் இருந்துவந்தன. இந்த கலாசாரத்தை உடைத்தவர்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எதிர்க் கட்சிகளை மனிதாபிமானத்துடன் பார்த்தவர்.


அதனால்தானோ என்னவோ எடப்பாடியார் தாயாரின் மரணத்துக்கு சகல கட்சிகளிலும் இருந்து ஆறுதல் குவிந்துள்ளன. இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்புஇது.

மாண்புமிகு தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ச. இராமதாசு, திரைப்பட நடிகர் திரு.ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசி மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு தங்களது இரங்கலை தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயார் மறைவிற்கு, மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. பி.தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் 

திரு. கே.பி.அன்பழகன், மாண்புமிகு சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி.கருப்பணன், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.உடுமலை மு.ராதாகிருஷ்ணன், மாண்புமிகு வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு. ஆர்.பி.உதயகுமார், மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் திரு. கே.சி.வீரமணி, மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.பி. முனுசாமி ஆகியோர் நேரில் சென்று, அஞ்சலி செலுத்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.