ஊழலுக்கு ஊழலே ஓட்டு கேட்கிறது... செந்தில்பாலாஜி, ஸ்டாலினை போட்டுத் தாக்கும் எடப்பாடி பழனிசாமி.

செல்லும் இடமெல்லாம் வெற்றி என்பதைப் போல், எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதற்குச் செல்லும் இடங்களில் எல்லாம், கூட்டம் அணிவகுப்பு போன்று வந்து குவிகிறது. எடப்பாடியும் போட்டுத் தாகுகிறார்.


கரூர் மாவட்ட மக்களால் பச்சோந்தி என அழைக்கப்படும் திமுகவின் செந்தில் பாலாஜியும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மல்லுகட்டும் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த எடப்பாடியின் பேச்சில் வழக்கத்தை விட காரம். ‘‘திமுக அராஜகம் செய்யும் ரௌடி கட்சி. அந்த கட்சி கட்டப்பஞ்சாயத்து செய்யும். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அங்கு உண்மைக்கு, உழைப்புக்கு, தியாகத்துக்கு அங்கீகாரம் கிடையாது’’ என ஹைபிட்சில் எகிறிய அவர், திமுகவுடன் அதிமுகவை ஒப்பிட்டு பேசினார்.

‘’அதிமுக உண்மையான ஜனநாயக இயக்கம். இங்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த இடத்திற்கு வர முடியும். இதற்கு நானே சாட்சி’’ என எடப்பாடி சொன்னபோது மக்கள் கைத்தட்டி அதனை ஆமோதித்தனர்.

 தொடர்ந்து பேசிய அவர், ’’செந்தில்பாலாஜி போன்று யார் வேண்டுமானாலும் திமுகவில் சேர் போடலாம். அதிமுக.,வில் இருந்து யார் போனாலும், மாவட்ட செயலாளர், மாநில பொறுப்பு, வேட்பாளர் என கொடுக்கின்றனர். செந்தில் பாலாஜி 5 கட்சிகளுக்கு மாறியுள்ளார். போலியான அவரை நம்பிவிடாதீர்கள். செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கரூரில் ஸ்டாலின் பேசியுள்ளார். இப்போது அவரே செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்கிறார்’’ என்கிற முதல்வரின் வாதங்களை வாக்காளர்கள் கூர்ந்து கவனித்தனர்.

 கிராமத்து மனிதராக எளிய நடையில் உரையாடும் எடப்பாடியின் பேச்சுக்கள் வாக்காளர்கள் இடையே நன்றாக ரீச் ஆவது அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது.