இரண்டாவது நாளாக 13 மாவட்டங்களுக்கு நிவர் புயல் இரண்டாவது நாள் விடுமுறை… எடப்பாடி பழனிசாமி முன்கூட்டியே அறிவிப்பு

நிவர் புயலையொட்டி சென்னையில் தொடர் மழை பெய்துவருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்கள், அதோடு, புயலால் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு


கடலூர் மாவட்ட மீனவ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்று அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அவர்களுடைய படகுகளையெல்லாம் பத்திரப்படுத்தியுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்குத் திரும்ப வேண்டுமென்று மீன்வளத் துறையின் மூலமாக செய்திகள் வழங்கப்பட்டு, அதன் வாயிலாக மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக திருவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 13 மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிப்பு செய்தார் எடப்பாடி பழனிசாமி.

 மேலும் அவர், அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே வேளாண் துறை செயலாளர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அனைவரும் இந்த திட்டத்தில் சேரவேண்டும் என்று முதல்வர் கேட்டுக்கொண்டார்.

புயல் இரவுதான் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற பிரச்னைகளை சமாளிப்பதற்காக முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.