யாகத்துக்கு அடுத்து கழுதைகளுக்குக் கல்யாணம்! எடப்பாடி பழனிசாமி அட்டகாச பிளான்

தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படியாவது மழையைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததுதான் மழை யாகம்.


வளர்ந்த நாடுகளில் எல்லாம், மழை வேண்டும் என்றால், விஞ்ஞான முறையில் செயற்கை மழையை வரவழைத்து வருகிறார்கள். ஆனால், எடப்பாடி அரசு கோயில்களில் யாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்துக்கு தமிழகம் முழுவதும் எடப்பாடிக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது வெற்றிக்காகத்தான் யாகம் நடத்தப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அடுத்து கழுதைகளுக்குக் கல்யாணம் செய்துவைக்க எடப்பாடி சொல்வார் என்று ஒரு செய்தி உலாவருகிறது.

ஏனென்றால், இப்போதும் கிராமப்புறங்களில் மழை வேண்டும் என்றால் கழுதைக்கு கல்யாணம் செய்துவைப்பது ஒரு வழக்கமாகவே இருந்துவருகிறது. இதனால்  பெரும்பாலான நேரங்களில் மழை வரவழைத்துவிடும் என்பதும் உண்மை.

அதனால், எந்த நேரமும் எடப்பாடி இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கலாம் என்று அமைச்சர்கள் பயந்துபோய் இருக்கிறார்களாம். ஏனென்றால் இதற்காக ஊர் ஊராக அலைந்து கழுதையைப் பிடித்து அதற்கு அமைச்சர் தலைமையில் திருமணம் செய்துவைக்க வேண்டிய நிலையும் வரலாமே.

ஆக,  மழை வரலைன்னா அமைச்சர்களுக்கு இருக்கவே இருக்கிறது கழுதை வேட்டை!