கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலுக்குள்..? பார்த்து அதிர்ச்சியில் உறைந்த அண்ணன்! திருப்பூர் பரபரப்பு!

கர்ப்பிணி பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட க்ளுகோஸில் தூசியிருந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் புது ராமகிருஷ்ணாபுரம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரியின் பெயர் தேவி. தேவி கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் ஜோசப் தேவியை மாநகராட்சி தாய் சேய் நல விடுதியில் கர்ப்பகால சிகிச்சைக்காக அனுமதித்தார்.

அப்போது தன் தங்கைக்கு ஏற்றப்பட்டிருந்த க்ளூகோஸில் வெள்ளை நிற தூசி இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அப்போது இருந்த பகுதிநேர மருத்துவரிடம் விசாரித்தார். அதற்கு அவர் சரியாக பதிலளிக்காமல் ஜோசப்பை வெளியே செல்லும்படி மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன ஜோசப் சிகிச்சை பெற்றுவரும் தன் சகோதரிக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார். இது குறித்து அவர் மாவட்ட சுகாதார நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாநகர நல அலுவலரான பூபதியிடம் புகாரை பற்றி கேட்டபோது, "குறிப்பிட்ட பேட்ச்சில் வந்த அனைத்து மருந்துகளையும் பரிசோதனைக்காக திருப்பி அனுப்பி வைத்துள்ளோம். அவற்றின் ரிப்போர்ட் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

இந்த சம்பவமானது மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.