விருது வழங்கும் விழா மேடையில் பிரபல நடிகை மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன தீபா வெங்கட், தொகுப்பாளர் ஒருவர் கூறிய "ஐ லவ் யூ வால்" மிக பெரிய தர்மசங்கடத்தை சந்தித்திருக்கிறார்.
டேய் என் புருசன் இருக்கார்..! பொது நிகழ்ச்சியில் தங்கை நடிகைக்கு அந்த நபரால் ஏற்பட்ட தர்மசங்கடம்...
மகாராஷ்டிராவில் பிறந்த தீபா வெங்கட் சிறுவயதிலேயே தமிழகத்திற்கு குடிபெயர்ந்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாகவும் வானொலி தொகுப்பாளினியாகவும் மற்றும் சினிமாவில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிரபல சீரியல் களான சித்தி, அண்ணாமலை, கோலங்கள் இவற்றிலும் நடித்து சின்ன திரை ரசிகர்களையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார். மேலும் நடிகை தீபா வெங்கட், தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்களிலும் ஹீரோக்களின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கடந்த 2007ஆம் ஆண்டு இவரது நடிப்பை சிறப்பித்து கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் குரல் என்றாலே நடிகை தீபா வெங்கட் தான் முதலில் நினைவுக்கு வருவார். ஏனெனில் நயன்தாராவின் பல திரைப்படங்களுக்கு தீபா வெங்கட் தன்னுடைய குரலை டப்பிங் செய்து இருக்கிறார். இதன் மூலம் அவர் மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார். எல்லாவற்றுக்கும் மேல் தீபா வெங்கட்டின் குரல் நயன்தாராவிற்கு ஏக பொருத்தம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் தீபா வெங்கட் தன்னுடைய கணவருடன் பங்கேற்றிருந்தார். அவரை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் மேடைக்கு அழைத்தனர். அப்போது அவரிடம் நயன்தாரா திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு டயலாக்கை பேசுமாறு கூறியுள்ளனர்.
ஸ்டேஜில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ராஜா ராணியில் நடிகர் ஜெய்யுடன் , நடிகை நயன்தாரா பேசும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த தீபா அருகிலிருந்த தொகுப்பாளரை பார்த்து , போடா போ உனக்கு யாராவது தேன்மொழி கனிமொழி என வாய்க்கா வரப்புல திரிஞ்சிகிட்டு இருப்பா.. அவளைத் தேடி தேடி லவ் பண்ணு என்று நடிகை நயன்தாராவின் டயலாக் பேசினார். உடனே அதற்கு அந்த தொகுப்பாளர், எனக்கு அப்ப நா தாங்க பயம்.. மத படி உங்களுக்கு ஐ லவ் யூங்க .. என்று நடிகர் ஜெய் கூறும் டயலாக்கை கூறினார். நடிகை தீபா உடனே என் புருஷன் இருக்கார் என்று கூறி சிரித்தார். இந்த சம்பவம் தீபா வெங்கட்டிற்கு சற்று தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.