என் பாதையில குறுக்க வர்றியா? பாம்பை பிடித்து கடித்து துண்டு துண்டாக துப்பிய இளைஞன்..! பார்ப்போரை பதற வைத்த சம்பவம்!

கர்நாடகாவில் குடிபோதையில் சென்ற இளைஞர் ஒருவர் தன்னுடைய பாதையில் வந்த பாம்பை பிடித்து கடித்து துண்டுதுண்டாக துப்பிய சம்பவம் பார்ப்போரின் நெஞ்சங்களை பதற வைத்துள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசாங்கம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் பல இடங்களில் தற்போது மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முதல் கர்நாடகாவில் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து மது பிரியர்கள் பலரும் தங்களுக்கு தேவையான மதுபானங்களை பெற்றுக்கொள்வதற்காக மதுபான கடைகளுக்கு படையெடுத்தனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஒருவர் குடித்துவிட்டு மது போதையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்படியாக அவர் செல்லும் பொழுது வழியில் ஒரு பாம்பு குறுக்கீட்டு இருக்கிறது. அதிக நீளம் கொண்ட அந்த பாம்பை சற்றும் அசராமல் கையில் எடுத்த அந்த இளைஞர், அதனை எப்படி என்னுடைய வழியில் குறுக்கிட முடியும் என்று கண்டபடி திட்டி இருக்கிறார்.

இதனையடுத்து கோபத்தில் அந்த பாம்பை ஆக்ரோஷமாக கடித்து துப்பி இருக்கிறார். அந்தப் பாம்பு சாகும்வரை அந்த இளைஞர் கடித்து குதறி இருக்கிறார். இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.