சென்னை ராடிசன் ப்ளு பைவ் ஸ்டார் ஹோட்டலில் போதை மாத்திரை விற்பனை! பொறி வைத்து பிடித்த போலீஸ்!

ராடிசன் ப்ளூ உணவகத்தில் போதை மாத்திரை விற்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை எழும்பூரில் ராடிசன் ப்ளூ என்ற புகழ்பெற்ற ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு அரசாங்க அனுமதி பெற்று பார் இயங்கி வருகிறது. இதன் பெயர் பிளஸ் பார். இந்த மதுபான கூடத்தில் விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் மது அருந்த வந்தனர். அப்போது பாரில் அதிக போதை தரும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போதை தடுப்பு பிரிவு ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பாரில் ஆய்வு நடத்தினர். ஆய்வு நடத்தியதில் ஒன்றரை லட்சம் மதிப்பலான எம்டிஎம்ஏ என்ற போதை மாத்திரை 2 ஸ்டாம்பு வடிவுகளில் இருந்தவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இவற்றை விற்பனைக்காக வைத்திருந்த ராஜா ஆணந்த்  மற்றும் ஹரிஹரனை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

ரேடிசன் புளு உணவகத்தின் நிர்வாகத்தினரை காவல்துறையினர் கடுமையாக கண்டித்தனர். இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவமானது சென்னை எழும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.