கனவில் வரும் மரணம்! எதை நமக்கு உணர்த்துகின்றன தெரியுமா?

கனவில் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இறப்பது போல வருவது மிகவும் மோசமான அனுபவம் ஆகும்


ஆனால் மரணம் பற்றிய கனவுகள் எப்பொழுதும் மரணம் நேரப்போவதன் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. மரணம் தொடர்பான கனவுகள் நமது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது. நமது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவோ அல்லது தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலைகளின் முடிவாகவோ கூட இந்த கனவுகள் இருக்கலாம். 

இறந்த நபர் மரணம் பற்றிய கனவுகளின் அர்த்தம் என்பது இறந்தது யார் அவர் எப்படி இறந்தார் என்பதை பொறுத்தது ஆகும். நாம் கனவு காணும் போதெல்லாம் நம் கனவில் உள்ளவர்கள் நம் ஆளுமை அல்லது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை குறிக்க முனைகிறார்கள் எனவே கனவில் வருபவர்கள் எதை உணர்த்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒருவேளை வயதானவர்கள் உங்கள் கனவில் இருந்தால் உங்களிடம் இருக்கும் பழைய பழக்கங்களை விட வேண்டும் என்று அர்த்தம். ஏனெனில் அவை அழிவை ஏற்படுத்தும்.  

பொதுவான மரண கனவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்: பெற்றோர்கள் அடிக்கடி காணும் கனவுகளில் ஒன்று குழந்தைகளின் மரணமாகும். அது அவர்களின் குழந்தை ஆபத்தில் இருக்கும் போதோ அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லும் போதோ வரும். இதன் அர்த்தம் பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் புலம்புவார்கள். இப்போது அது முடிந்துவிட்டது. இனி அது வராது என்பதன் அர்த்தம் தான் இது. 

பெற்றோரின் மரணம்: உங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கும் போதே அவர்கள் மரணிப்பது போல உங்களுக்கு கனவு வந்தால் அவர்களின் இழப்பை எண்ணி நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மிகவும் வயதானவராக இருந்தால் இது முற்றிலும் உண்மையாகும். ஒருவேளை உங்கள் பெற்றோர்கள் ஏற்கனவே இருந்திருந்தால் இது அவர்களை வழியனுப்ப எடுத்துக்கொண்ட வாய்ப்பாகும். 

கணவன் அல்லது மனைவியின் மரணம்: மிகவும் நேசிப்பவர்கள் இறப்பது போல கனவு வந்தால் தங்கள் துணையிடம் அவர்கள் எதிர்பார்க்கும் குணங்களில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று அர்த்தம். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணித்தால் அவர்கள் விரைவில் இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தமல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது உண்மையாக இருக்காது.