சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி திருமணமான சில நிமிடங்களிலேயே கடத்தப்பட்டு சம்பவமானது ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாலி கட்டிய மகிழ்ச்சியில் காதல் கணவனுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த இளம்பெண்! அடுத்த நொடி அங்கு அரங்கேறிய பரபர சம்பவம்!
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கவுந்தம்பாடி எனும் இடத்தை சேர்ந்த செல்வம் என்பவர் அருகே அமைந்துள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இவர்களுடைய காதலை நிராகரித்தனர்.
இந்த செய்தியறிந்த அப்போது திராவிடர் கழகத்தினர் சேலம் மாவட்டத்திலுள்ள காவலாண்டியூர் என்னுமிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனை குறுக்கு வழி மூலம் தெரிந்து கொண்ட இருவீட்டாரும் ஆட்களை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் ஆட்கள் வந்து சேரும் முன்னரே இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடியாட்கள் அப்பகுதியிலிருந்த 40-க்கும் மேற்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். திருமணமாகி சில நிமிடங்களே ஆன காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.
உடனடியாக திராவிடர் கழகத்தினர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி கடத்தப்பட்ட இளம் ஜோடியை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.