திடீரென சரிந்த பனி மலை..! உள்ளே 18 மணி நேரம் சிக்கியிருந்த 17 வயது சிறுமி! மீட்கப்பட்ட திக்திக் நிமிடங்கள்!

பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 18 மணி நேரத்திற்கு பிறகு காப்பாற்றப்பட்ட சம்பவமானது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டிலுள்ள நீலம் இடைப்பாடு பகுதியில் கடுமையான பணி சரிவு ஏற்பட்டு வருகிறது. இங்கு சமீனா மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமையன்று இங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் சமீனாவின் மகள் சிக்கிக்கொண்டுள்ளார். 

தன் கண் முன்னாலேயே மகள் பனிச்சரிவில் சிக்கி கொண்டதை கண்ட சமீனா உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 18 மணிநேர போராட்டத்திற்கு பிறகு 12 வயதான அந்த சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகுதியில் தொடர்ந்து கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பனிச்சரிவில் கிட்டத்தட்ட நூறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் பேரிடர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.