அது போடாமல் என் பக்கத்துல வராதீங்க..! ஒதுங்கி பெண் அதிகாரிக்கு ஆண் ஊழியரால் அலுவலகத்தில் ஏற்பட்ட பகீர் சம்பவம்!

ஆந்திராவில் சுற்றுலாத்துறை துணை மேலாளரை, மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும், என்று அவர் கூறியதற்காக கொடூரமாக பெண் ஊழியரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலா துறை விடுதியில் பாஸ்கர் ராவ் என்பவர் , துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கர் ராவ் வேலை விஷயமாக, அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் பேசியிருக்கிறார்.

அந்த நேரத்தில், உஷாராணியோ முகத்துல கவசம் அணிவதை கடைபிடியுங்கள் என்று மிகவும் பணிவாக கூறியுள்ளார். அப்படி கவசம் அணியாமல் என் உட்பட யாரிடமும் பேசாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால் உஷாராணியின் அறிவுறுத்தலால் பாஸ்கர் ராவ்க்கும் உஷாராணிக்கும் வார்த்தைப் போர் மூண்டது. 

இதனையடுத்து, கோபம் அடைந்த பாஸ்கர் ராவ், உஷாராணியின் தலைமுடியை பிடித்து இழுத்து, சரமாரியாக தாக்கியுள்ளார். அவர் தாக்கியதில் கீழே விழுந்த உஷா ராணி, அலறித் துடிக்க, அப்போதும் தொடர்ந்து உஷா ராணியை பாஸ்கர் ராவ் துன்புறுத்தியுள்ளார். ஆனால் இருவரும் அங்கு சிசிடிவி கேமரா உள்ளதை என்பதை மறந்து தகராறில் இடுப்பட்டுள்ளனர். பின்னர் இந்த சம்பவம் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ குறித்து தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில், உஷாராணி, பாஸ்கர் ராவ் மீது அளித்த புகார் அளித்துள்ளார். பின்னர் புகாரின் பேரில் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் ஏழுந்துள்ளது. அந்த கோரிக்கையின் அடிப்படையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகளும் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.