பரபரப்பான கட்டத்தில் பிரதமர் மோடியுடன் போனில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்! காரணம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சண்டை வலுத்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சமீபத்தில் ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா ட்ரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவ படையின் முக்கிய புள்ளியாக கருதப்படும் சுலைமானி அவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று ஈரானில் மக்கள் வெள்ளத்தில் நடைபெற்றது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் பல்வேறு முயற்சிகளை யோசித்து வருகிறது. இந்த பரபரப்பான நிலையில்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து பேசியுள்ளார். இதில் பிரதமர் மோடி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் மேலும் அமெரிக்கா மக்கள் எல்லா வளமும் பெற்று நலத்துடன் இருக்க இந்தியா சார்பாக வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்டு உறவும் முன்பை போலவே ஒற்றுமையுடன் தொடரவேண்டும் எனவும் இவர்கள் பேசி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதட்டமான நிலை நிலவி வரும் இந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து பேசியது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.