பாறாங்கல்லில் கட்டி ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை ஆற்றில் வீசிய கொடூரன்! பதற வைக்கும் காரணம்!

நாயை மிகவும் அதிகமான எடையுடைய கல்லுடன் கட்டி பெண்ணொருவர் ஆற்றில் வீசிய சம்பவமானது இங்கிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து நாட்டில் ட்ரெண்ட் ஆறு அமைந்துள்ளது. இங்கு நடு ஆற்றில் நாயொன்று நீச்சலடிக்க இயலாமல் தத்தளித்துக்கொண்டிருந்தது. உடனடியாக மீட்பு படையினர் நாயை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது அந்த நாயின் உடலுடன் பெரிய கல்லொன்று கட்டப்பட்டு இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒருவழியாக நெடு நேர போராட்டத்திற்கு பிறகு அந்த நாயை கரைக்கு இழுத்து வந்து மீட்டனர். பின்னர் அந்த நாய்க்கு உணவளித்து பராமரித்தனர். 

இந்நிலையில் அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த சிப்பை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது காவல்துறையினருக்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

உடனடியாக இருவரையும் காவல்துறையினர் கைது எதற்காக அந்த நாயிடம் மனிதநேயமற்று நடந்து கொண்டனர் என்பது குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்கள் உரிய நேரத்தில் தகவலளித்ததால் மட்டுமே நாயை காப்பாற்ற முடிந்தது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்காம்ஷைய்ர் மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.