காங்கிரஸ் கட்சிக்கு இனி முஸ்லீம் ஓட்டுக்கள் இல்லையா..? பாப்புலர் ஃபிரண்ட் முடிவு.

இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்காத காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப் போடுவது சரியான செயல் அல்ல என்று மதச்சார்பற்ற கட்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது.


பீகார் தேர்தல் முடிவுகள் நாட்டில் உள்ள மைய நீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளுக்கான அழைப்பு மணி என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் OMA ஸலாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் போன்ற மைய நீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகள் மேற்கொள்ளும் தொடர் தவறுகளுக்கான மற்றொரு உதாரணமாக பீகார் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. பா.ஜ.க.வின் முஸ்லிம் விரோத, மக்கள் விரோத பாசிச அரசியலுக்கு மாற்றாக தாங்கள் இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது. முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளான CAA, NRC, முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை பிரச்சாரத்தின் போது கூட எழுப்பப்படவில்லை. முஸ்லிம் வாக்குகளை இயல்பாக பெற்றுக்கொள்ளும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளால், சங்பரிவாரின் பிரிவினைவாத பிரச்சாரங்களுக்கு எதிராக வலிமையான மதச்சார்பற்ற கட்டமைப்பை மேற்கொண்டு மக்கள் மனங்களைக் கவர இயலவில்லை. ஆனால், பா.ஜ.க.வின் இந்து வங்கியை பெறுவதற்காக மென்மையான இந்துத்துவத்தை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இக்கட்சிகள் உண்மை எதார்த்தத்தை தற்போது கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், முடிவுகள் வந்த பிறகு தங்கள் தோல்விகளுக்கான சிறுபான்மை கட்சிகளை இவர்கள் வேகமாக குற்றம் சாட்டினார்.

 முஸ்லிம் வாக்காளர்கள் ஒரு தீவிர மாற்றத்தை மேற்கொண்டு இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. காலங்காலமாக முஸ்லிம்களை தங்களின் இயல்பான வாக்கு வங்கியாக பார்த்துவரும் கட்சிகளுக்கு ஐந்து இடங்களை AIMIM வென்றிருப்பது தெளிவான செய்தியை வழங்குகிறது. தங்களுக்கு அர்த்தமுள்ள பிரதிநிதித்துவம் அல்லது முஸ்லிம் கட்சிகளுக்கு எவ்வித இடத்தையும் வழங்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையே சமூகம் தெரிவிக்கிறது.

இந்த முடிவுகள் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு ஓர் அழைப்பு மணி என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் தெளிவாக்க விரும்புகிறது. இதிலிருந்து மதச்சார்பற்ற கட்சிகள் பாடங்களைக் கற்றுக் கொள்வதில் மதச்சார்பற்ற இந்தியாவுக்கான எதிர்காலம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.