அம்பேத்கர் டீ-சர்ட்டுடன் ரோட்டுல நடப்பியாடா? தலித் இளைஞனை நையப்புடைத்த போலீஸ்..! திருவண்ணாமலையில் ஜாதி மோதல் பீதி!

ஊரடங்கு உத்தரவின்போது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வந்த இளைஞர் ஒருவரை போலீஸ் தாக்கியதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் புகார் எழுந்துள்ளது.


செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த கெளதமபிரியன் என்பவர் மார்ச் 31ம் தேதி கிளையூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் குப்பநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோ தங்கையின் தோழி வந்தபோது அவருடன் பேசியுள்ளார் கெளதமபிரியன். அப்போது அங்கு வந்த காவலர் ஈஸ்வரன் என்பவர், கௌதமபிரியனை பார்த்து. `யார் நீ. எதற்காக ஊர் தெருக்குள்ள வந்தாய்.

இந்த டி-சர்ட் போட்டுகிட்டு ஊர் தெருக்குள்ள வருவாயா? அந்த அளவிற்கு உனக்கு தைரியம் வந்துடுச்சாடா? அந்தப் பெண்ணிடம் ஏன் பேசினாய்’ என கேட்டதாகவும், இதுமட்டுமின்றி கெளதமபிரியனை ரோட்டில் முட்டிபோட வைத்து கேபிள் டிவி ஒயரால் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அம்பேத்கர் படம் போட்ட டி சர்ட்டைக் கிழித்து கெளதமபிரியனை துரத்தி அடித்ததாகவும் கூறப்படுகிறது. காவலர் ஈஸ்வரன் செங்கம் அடுத்த புதுப்பாளையம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிகிறார்.

சம்பவம் நடந்த அன்று ஈஸ்வரன் விடுமுறையில் இருந்தார். மேலும் கெளதமபிரியனை அடிக்கும்போது அவர் குடிபோதையில் இருந்ததாக அங்கிருப்பவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஈஸ்வரன் அடிக்கும்போது அங்கிருக்கும் பொதுமக்கள் `அந்தத் தம்பியை அடிக்காதீங்க சார்’ என்று பல முறை சொல்லியும், அவர் சாதி பெயரைச் சொல்லி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதை அங்கிருக்கும் இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் போட்டுவிட்டனர். இந்நிலையில் வீடியோ வைரலாக வேறு வழியின்றி ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது செங்கம் காவல்துறை.