கொரோனாவால் நான் இறந்தால்? பிறக்கும் குழந்தைக்கு நிறை மாத கர்ப்பிணி பெண் மருத்துவர் வெளியிட்ட பகீர் வீடியோ!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு போதிய பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்று கர்ப்பிணி மருத்துவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவை பூர்வீகமாக கொண்டு பிரிட்டன் நாட்டில் மருத்துவராக மீனல் விஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய கணவரின் பெயர் நிஷாந்த் ஜோஷி. இந்நிலையில் மீனல் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். பிரிட்டன் நாட்டில் இத்தம்பதியினர் கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர்.

மீனல், தாம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை போன்று உணர்ந்துள்ளார். மேலும் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு ஒரு உணர்ச்சிமிக்க வீடியோவை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், பிரிட்டனில் நோய்க்கு எதிராக போராடும்மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு உலக சுகாதார மையமும் பிரிட்டன் அரசாங்கமும் தெரிவித்துள்ள பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவரும் சட்டத்தின் உதவியை நாடியுள்ளனர். அதுமட்டுமின்றி மருத்துவ உபகரணங்கள் நல்ல ரகத்தில் கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். சுகாதாரத்துறை மற்றும் இங்கிலாந்து பொது சுகாதார அமைப்பு ஆகிய அமைப்புகளுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

அந்த வீடியோவில், "அன்புள்ள ராதிகா, இன்னும் 63 நாட்களில் உனக்கு பிடித்த குடியிருப்பாக இது மாற உள்ளது. எனக்கு பிடித்தமான இடங்கள் மற்றும் நபர்களை நிச்சயமாக உனக்கு அறிமுகம் செய்து வைப்பேன். உனக்குத் தெரியுமா நீ மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பிறக்கவுள்ளாய். மனிதர்கள் இறக்கின்றனர். உலகமே போர்க்கோலம் பூண்டுள்ளது. மருத்துவர்கள் போர் வீரர்களை போன்று முன் வரிசையில் நின்று போராடி வருகின்றோம். இக்கட்டான சூழ்நிலையில் நான் இறக்க நேரிட்டால் இந்த வீடியோ உனக்கு பயன்படும்" என்று கூறியுள்ளார்.

மேலும் வீடியோவில் தான் ஒரு கர்ப்பிணி மருத்துவர் என்றும் என்.ஹெச்.எஸ் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப்பட வேண்டும் என்றும், எங்களுக்காக கை தட்டினால் மட்டும் போதாது இது போன்ற அடிப்படை உதவிகளையும் செய்து தர வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியானது தற்போது பிரிட்டனில் பெரிதும் வைரலாகி வருகிறது