உங்க ஆளுங்கலால தான் கொரோனா பரவுது..! முஸ்லீம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை தர மருத்த பெண் மருத்துவர்..! சேலம் பகீர்!

மதத்தின் அடிப்படையில் மருத்துவர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காத சம்பவமானது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சல்மா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரின் பெயர் ஜாவித். இவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், சல்மா 8 மதங்களுக்கு முன்னர் கருவுற்றார். 

சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு சற்று உடல்நலம் குன்றியது. சிகிச்சை மேற்கொள்வதற்காக அல்லது வீட்டிற்கு அருகே அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இந்த மருத்துவமனையில் லதா என்ற மருத்துவர் பணியாற்றி வந்துள்ளார்.

சல்மாவை பார்த்தவுடன் லதா நோய் தொடர்பில் கேள்வி கேட்காமல், "நீங்கள் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரா" என்று கேட்டுள்ளார். மத அடிப்படையிலேயே சல்மாவிடம், லதா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதன் காரணமாக தான் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது என்றும் லதா சல்மாவிடம் கூறியுள்ளார்.

அனைத்தையும் பேசிவிட்டு சிகிச்சை மேற்கொள்ளாமல், மே-3-ஆம் தேதிக்கு பிறகு மரங்கள் சிகிச்சையை மேற்கொள்ளலாம் என்ற சல்மாவையும்,  அவருடைய கணவரையும் மருத்துவமனையை விட்டு மருத்துவர் லதா வெளியேற்றியுள்ளார்.

இதனால் பெரிதும் மன வேதனை அடைந்த சல்மா சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நிகழ்ந்தவற்றை கூறி புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட ஆட்சியர் விசாரணைக்கு பின்னர் தக்க நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 

இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.