ஹாஸ்பிடல் கொரோனா வார்டில் ஆண் நர்ஸ் திருமணம் செய்து கொண்ட பிரபல பெண் டாக்டர்..! நெகிழ்ச்சி காரணம்!

ஊரடங்கினால் மருத்துவமனையிலேயே காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டிருப்பது பிரிட்டன் நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் என்ற மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு ஜான் டிப்பிங் என்ற பெண் செவிலியர் பணியாற்றி வருகிறார் இவருடைய வயது 34. அதே மருத்துவமனையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட அனானலைன் நவரத்தினம் என்பவரும் பணியாற்றி வருகிறார்.

இவ்விருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தங்களுடைய காதலை முறைப்படி இரு வீட்டாரிடமும் தெரிவித்து சம்மதம் பெற்றுள்ளனர். அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் இவர்களுடைய திருமணம் நடப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது. ஆனால் வடக்கு அயர்லாந்து மற்றும் இலங்கையிலிருந்து இவர்களுடைய குடும்பத்தினர் பிரிட்டன் நாட்டிற்கும் பாதுகாப்பாக வந்தடையும் முடியுமா என்ற அச்சம் இருவரது குடும்பத்திலும் எழுந்துள்ளது. 

இந்த அச்சத்தினால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தம்பதியினர் தவிர்த்துள்ளனர். இதற்கிடையே தங்களுடைய குடும்பத்தினரின் நலனே பெரிது என்று மருத்துவமனையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அன்று மருத்துவமனையின் தேவாலயத்தில் மிக சாதாரணமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமண காட்சிகளே தங்களுடைய செல்போன் மூலம் உறவினர்களுக்கு நேரலை செய்துள்ளனர்.

இந்த செய்தியானது தற்போது பிரிட்டன் நாட்டில் வைரலாகி வருகிறது.