கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

கர்ப்பிணி பெண்ணுக்கு முதல் மூன்று மாதங்களில் டென்ஷன், மன அழுத்தம் தோன்றும்போது, அபார்ஷன் போன்ற ஆபத்தான விளைவு ஏற்படலாம் என்று பார்த்தோம். கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.


• கர்ப்பிணி எதிர்பாராத அதிர்ச்சிக்கு ஆளாவது மனநல பாதிப்புக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

• கர்ப்ப காலத்திலும், பிரசவ நேரங்களிலும் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்பு காரணமாகவும் கர்ப்பிணிக்கு மனம் பாதிக்கப்படலாம்.

• 16 வயதுக்குள் கர்ப்பம் அடைவதும் 40 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள் பிறரால் கேலி செய்யப்படுவதாக நினைத்து பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

• சமுதாய அந்தஸ்து, குடும்பத்தாரின் ஏச்சுக்கு ஆளாவதும் மனநல பாதிப்புக்கு காரணிகளாக இருக்கலாம்.

இவை தவிர ஏற்கெனவே மனநல குழப்பம் உள்ளவர்களுக்கு கர்ப்ப காலத்தில் மனநலம் பாதிக்கப்படலாம். இந்த பாதிப்பு கர்ப்பம் அறியப்பட்ட நாள் தொடங்கி, பிரசவத்திற்கு முன்பு அல்லது பிரசவத்திற்கு பின்பு ஏற்படலாம். கர்ப்பிணிகள் மனநலன் குறித்து மேலும் சில தகவல்கள் நாளை அறிந்துகொள்ளலாம்.