குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதில் திருமணம்! வயது 35 ஆகியும் குழந்தை இல்லை! பெண்மணி எடுத்த அதிர்ச்சி முடிவு! தேனி சம்பவம்!

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் என்னும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கெங்குவார்பட்டிக்கு அருகேயுள்ள புஸ்பராணி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவியின் பெயர் ஜோதி. ஜோதி என் வயது 35 இவ்விருவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
குழந்தை இல்லாமல் தம்பதியினர் மிகவும் சங்கடப்பட்டனர். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தாலும் அவை பலனளிக்கவில்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளன. அதன்படி சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே கடுமையான சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் வாழ்க்கையின் மீது வெறுப்படைந்த ஜோதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவமானது கெங்குவார்பட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.