பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

காயாகவும் இல்லாமல் பழமாகவும் இல்லாமல் புதிய சுவை கொண்ட பேரிக்காயை இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்புவதில்லை. பச்சை நிறத்தில் இருந்தாலும் பழம் போன்று இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையது.


நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில், ஆப்பிளைவிட அதிக மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையும் பேரிக்காய் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது.

·         பேரிக்காயில் அதிகமாக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. தொற்று நோய்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.

·         பேரிக்காய் சாறு, மெனோபஸ் நிலையில் இருக்கும் பெண்கள் மற்றும் வயதான ஆண்களின் எலும்புகளுக்கு பலம் தருகிறது.

·         வளரும் குழந்தைகளுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் பேரிக்காயில் நிரம்பியுள்ளன.

·         இதய படபடப்பு, மன இறுக்கம், மன அழுத்தம் உடையவர்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டுவந்தால் நிம்மதி உண்டாகும்.

மஞ்சள் நிறத்துக்கு மாறிய மற்றும் அழுகத் தொடங்கும் பேரிக்காயை பயன்படுத்தவே கூடாது. கடித்துத் தின்பதறகு குழந்தைகள் மறுத்தால் சாறு எடுத்துக் கொடுக்க வேண்டும்.