பிரசவத்திற்கு பிறகும் பெண்ணுக்கு எப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்னு தெரியுமா ???

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் பிரசவம். குழந்தை பிறந்தவுடன் தாயின் உடல்நிலை மற்றும் மனநிலையில் பல்வேறு மாற்றங்களும் அதனால் பாதிப்புகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என நேற்று பார்த்திருக்கிறோம். எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படலாம் என்பதை இன்றும் பார்க்கலாம்.


·         தசைகள் விரிவடைந்து மீண்டும் பழைய நிலையை அடைவதால், சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் பிரச்னை உண்டாகலாம்.

·         சிரிக்கும்போது அல்லது இருமும்போது தன்னை அறியாமல் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்பு உண்டு.

·         ஆசனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடையிலுள்ள பெரினியம் எனப்படும் தோல், பிரசவத்தின்போது கிழிக்கப்பட வாய்ப்பு உண்டு. இதனால் உட்காரும்போது வலி உண்டாகலாம்.

·         குழந்தை பிறந்ததும் முடி உதிர்தல் அதிகமாக இருக்கலாம். இதற்கு போதுமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒல்லியாக இருந்தவர் கர்ப்பத்தின்போது குண்டாகி இருக்கலாம். பிரசவம் முடிந்ததுமே ஒல்லியாகவில்லை என்று கவலைப்படக் கூடாது. உடனடியாக உடல் எடை குறைவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதால் பால் கொடுப்பது நிறுத்தும் வரையிலாவது காத்திருக்கவேண்டும்