வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

கடைகளில் வெங்காயத்தாள் விற்பனை ஆனாலும் அதனை வாங்கி பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவுதான். வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக உள்ளதால் உடல் நலனுக்கு நல்லது.


·         வெங்காயட்தாளில் வைட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள்  நிரம்பி வழிகின்றன.

·         வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து, நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. கண் பார்வை கூர்மை அடைய உதவுகிறது..

·         சின்ன வெங்காயம் போலவே ஆண்மைக்கு சுறுசுறுப்பும் மதமதப்பும் தரும் சக்தி வெங்காயத்தாளுக்கு உண்டு.

·         இதில் உள்ள புரோப்பைல் டைசல்பேட்டானது, ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ரத்தக் கொழுப்பையும் குறைக்கிறது.