இங்கிலாந்தின் புதிய பிரதமர் நம் இந்தியாவின் மருமகன் என்பது தெரியுமா? சிக்கன் டிக்கா ரசிகரை மோடி மதிப்பாரா?

தெரசா மே பிரிக்ஸ்ட் விவகாரத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து டோரி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் போரிஸ் ஜான்சன்


தெரசா மே பிரிக்ஸ்ட் விவகாரத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து டோரி கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் போரிஸ் ஜான்சன் ' சிக்கன் டிக்கா' ரசிகர்.அவருக்கு ஏகப்பட்ட உறவினர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட! இதற்கு காரணம் இப்போது அவரை விட்டுப் பிரிந்து விட்ட அவரது மனைவி மரியா வீலர். வழக்குரைஞரான மரினாவின் தந்தை சார்லஸ் வீலர் புகழ்பெற்ற பத்திரிகையாளர்.

அவரது மனைவி பெயர் தீப் சிங் என்கிற சீக்கிய பெண்.தீப் சிங்கின் முதல் கணவர் மறைந்த எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் தம்பியான தல்ஜித் சிங்.தீப் சிங்கின் அக்கா பெயர் அமர்ஜித் சிங்.அவர் திருமணம் செய்துகொண்டது குஷ்வந்த் சிங்கின் அண்ணனான பகவத் சிங்கை.பகவத் சிங்கின் சகோதரி மகள் அம்ப்ரீதா சிங்கின் முதல் கணவர் பிரபல இந்தி நடிகர் சாயிஃப் அலிகான்.அவர்களது மகள்தான் பாலிவுட் நட்சத்திரம் சாரா அலிகான்.

தலை சுற்றுகிறதா,அரசியல்வாதி குடும்பமா சும்மாவா. போரிஸ் ஜான்சன் லண்டன் மேயராக இருந்தபொழுது லண்டனில் இருக்கும் இந்திய உணவகங்களுக்கு அடிக்கடி செல்லும் அளவுக்கு சிக்கன் டிக்கா அவரை கவர்ந்திருக்கிறது.அதன் பிறகு இங்கிலாந்தின் வெளிவிவகார துறை அமைச்சராக இருந்த போரிஸ் ஜான்சன் இப்போது இங்கிலாந்தின் பிரதமராகி விட்டார்.நான் ஒரு அரை சீக்கியரை மணந்து கொண்டதால் இங்கிலாந்தில் இருக்கும் மொத்த சீக்கியர்களும் என்னை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லும் ஜான்சனின் பொழுது போக்கு காலியான ஒயின் கிரேட்களைக் வைத்து மாடல் பஸ்கள் செய்வதுதானாம்.

இது மட்டுமல்லாமல் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுடனும் ஒரு தொடர்பிருக்கிறது.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நரசிம்மராவ் அமைச்சரவை உறுப்பினருமான கிருஷ்ண குமாரின் மகளுக்கும் குஷ்வந்த் சிங்கின் அண்ணன் பேரனுக்கும் 2003 திருவட்டாரி நடந்த திருமணத்திற்கு வந்திருந்தார் போரிஸ் ஜான்சன்.மந்திரி வீட்டுத் திருமணம் என்பதால் மாப்பிள்ளை அழைப்புக்கு 'கோபாலன் ' என்கிற யானையை கொண்டுவந்து இருக்கிறார்கள்

.ஏகப்பட்ட சர்தார்ஜிகளின் தலைப்பாகையைப் பார்த்தோ,இல்லை வெள்ளையர்களை பிடிக்காமலோ கோபாலன் என்கிற யானை பலபேரை பந்தாடிவிட்டது அந்தத் திருமண ஊர்வலத்தில் தாக்குதலுக்கு உள்ளான எட்டுப்பேரில் போரிஸ் ஜாண்சனும் ஒருவர்.அசப்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சாயலில் இருக்கும் ஜான்சனின் இந்திய தொடர்புகள் நமது மோடிஜிக்கு எந்த அளவு உதவியாய் இருக்கும் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.