கர்ப்பிணியின் மனநல பாதிப்புக்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

கர்ப்பிணி பெண்ணுக்கு மன அழுத்தம், கோபம், பயம், டென்ஷன் ஏற்படும்போது மனநல பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் அதனால் அவருக்கும், பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் பார்த்தோம். இப்படிப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகளை பார்க்கலாம்.


• ஏற்கெனவே மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பதை அறிந்தபிறகே சிகிச்சைக்கான நடவடிக்கைகளை தொடங்கவேண்டும்.

• ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர் என்றால், முன்பு அவர் எடுத்துக்கொண்ட மருந்துகளை அறிந்து இப்போது தொடரவேண்டிய வழிவகைகளை ஆராய வேண்டும்.

• கர்ப்ப காலத்தில் மட்டுமே பாதிக்கப்பட்டவர் என்றால் மருத்துவ ஆலோசனையும் வழிகாட்டுதலும் அரவணைப்பும் போதுமானது.

• எதிர்காலம் குறித்த பயம், அச்சம் போக்கப்பட வேண்டும். நல்ல ஓய்வு, சரியான உணவு மற்றும் அன்பு வலியுறுத்தப்பட வேண்டும்.

கர்ப்பிணியை தனியே வீட்டில் இருக்கச்செய்யக்கூடாது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியே அழைத்துச்செல்வதும், தியானம், வழிபாட்டு முறைகளை பின்பற்றச் சொல்வதும் மனநிலையை மேம்படுத்தலாம். சிலருக்கு ஆலோசனையுடன் மருந்துகளும் கொடுக்க வேண்டியிருக்கும். கர்ப்பிணிக்கான மனநல பாதிப்பு குறித்த மேலும் சில தகவல்களை நாளை பார்க்கலாம்.