டேய் நான் மாரியாத்தா வந்துருக்கேன்! பிரச்சாரத்திற்கு வந்த பாரிவேந்தருக்கு பீதி கிளப்பிய சாமியாடி பெண்!

திருச்சி மாவட்டம் ,முசிறி அருகே பாரிவேந்தர் பிரச்சாரத்தில் சாமி வந்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் திமுக சார்பில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகிறார். எதிரணியில் சிவபதி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இருவரும் தேர்தல் களத்தில் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாரிவேந்தர் முசிறி அருகே உள்ள தொட்டியம் தாலுக்கா அம்மன்குடி கிராமத்தில் திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று ஆவேசமாக அருள் வந்து சாமியாடினார்.

சாமியாடிய  அந்த பெண், டேய் நான் மாரியம்மன் வந்திருக்கிறேன் உன்னை இந்த தேர்தலில் ஜெயிக்க வைக்கிறேன் என்று அருள்வாக்கு கூறி பாரிவேந்தருக்கு ஆசி வழங்கினார் .இதனால் கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.