வனிதா மகளுக்கு சடங்கு..! புறக்கணித்த அண்ணன் அருண் விஜய்! தாய்மாமனாக சீர் செய்து நெகிழ வைத்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகளுக்கு தாய் மாமன் சீர் கொண்டு வந்து அளித்துள்ளார் இயக்குனர் சேரன் .


பிரபல தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி கோலாகலமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர் இதில் நடிகை வனிதா விஜயகுமார் , இயக்குநர் சேரன், இலங்கையை சேர்ந்த லாஸ்லியா ,செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு முதலியோரும் பங்கேற்றனர்.

பல பரப்பு பரப்புகளும் போட்டிகளும் சர்ச்சைகளும் நிறைந்திருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய சக போட்டியாளரான சேரனை அண்ணன் ஆகவே பாவித்தார். மேலும் லாஸ்லியாவின் தன்னுடைய சொந்த தங்கையாகவும் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை வனிதாவின் மூத்த மகள் பெரிய பெண்ணாக மாறி விட்டாராம். ஆகையால் அவருடைய சடங்கு சம்பிரதாயத்தில் வனிதாவின் தந்தை விஜயகுமார் , சகோதரர் அருண் விஜய் மற்றும் தங்கைகள் ஆகிய எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தாய்மாமன் சீர் செய்ய வேண்டிய அருண் விஜய்யும் வனிதாவின் மகளுக்கு எந்தவித சடங்கும் செய்யவில்லை என்றதால் இயக்குனர் சேரன் தாய்மாமன் ஆக முன் நின்று வனிதா மக்களுக்கு செய்யவேண்டிய அனைத்து தாய்மாமன் சடங்குகளை செய்துள்ளார்.

மேலும் லாஸ்லியா , பாத்திமா பாபு உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வனிதாவின் மகளை வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த சேரனின் ரசிகர்கள் அவரை பெருமிதமாக பாராட்டி வருகின்றனர்.