கடவுள் செய்த அணிகலன் அது..! பெண்ணின் மார்பகத்தை கொச்சையாக கூறிய டைரக்டர்..! அப்போ உன் மகளுக்கு? கொதிக்கும் பெண்கள்!

புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் இடம்பெற்றிருக்கும் பெண்ணின் மார்பகத்தை கொச்சையாக வர்ணித்து கடவுள் செய்த அணிகலன் என்று ஒப்பிட்டு இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இயக்குனர் ராம் கோபால் வர்மா தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். 58 வயதாகும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, சமீபகாலமாகவே சர்ச்சைகள் பலவற்றில் சிக்கிய வண்ணம் உள்ளார். அந்த வகையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது மீண்டும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர் ஆவார். மனதில் தோன்றும் கருத்துக்கள் பலவற்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார். 

அந்த வகையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது புதிய ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் பெண்கள் இருவர் காரில் அமர்ந்திருப்பது போல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கேப்ஷனும் அளித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் மனிதனால் உருவாக்கப்பட்ட அணிகலன்களை அழகாக அணிந்துகொண்டு காட்சி அளிக்கிறார். அதேபோல் காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு இளம்பெண் ஆபரணங்கள் ஏதும் அணியாமல் மிகவும் லோ நெக் உடன் முன்னழகு அப்படியே தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ராம்கோபால் வர்மா அதற்கு கேப்ஷனாக , மனிதன் உருவாக்கிய அணிகலன் முன்னால் உள்ளது. கடவுள் உருவாக்கிய அணிகலன் பின்னால் உள்ளது என்று அந்தப் பெண்ணின் முன்னழகை மிகவும் கொச்சையாக வர்ணித்திருக்கிறார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை விளாசி வருகின்றனர். அதில் நெட்டிசன் ஒருவர், ஒருவேளை அந்த இடத்தில் உங்கள் மகள் அமர்ந்திருந்தாலும் இம்மாதிரியான கண்ணோட்டத்தில்தான் பார்ப்பீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக கருத்துக்களாக பதிவு செய்து வருகின்றனர்.