முன்னணி சினிமா இயக்குனருக்கு 2ம் தாரமாகும் பிரபல டாக்டர்! யாருக்கு தெரியுமா?

பிரபல மருத்துவர் ஒருவர் முன்னணி சினிமா இயக்குனர் ஒருவருக்கு 2வது மனைவியாக உள்ளார்.


தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.எல்.விஜய். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் மகன் ஆவார். இளைய தளபதி விஜயை வைத்து தலைவா திரைப்படத்தை விஜய் இயக்கியுள்ளார். மேலும் விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் விஜய் இயக்கத்தில் நடித்துள்ளனர்.

தற்போது விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார். முன்னதாக விஜய் நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் இயக்குனர் விஜயை விவாகரத்து செய்தார்.

இதனை தொடர்ந்து திரைப்பட இயக்கத்தில் விஜய் கவனம் செலுத்தி வந்தார். அதோடு மட்டும் அல்லாமல் மலர் டீச்சர், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சாய் பல்லவியுடன் இயக்குனர் விஜய் காதல் செய்து வருவதாக தகவல் வெளியானது. இதனால் விஜயின் தந்தை ஏ எல் அழகப்பன் அதிர்ச்சி அடைந்துவிட்டார்.

ஏற்கனவே ஒரு சினிமாகாரியை மகன் ஏற்கனவே திருமணம் செய்து படாதபாடு பட்ட நிலையில் மறுபடியும் ஒரு சினிமாக்காரியா என்று அதிர்ச்சியுடன் அதிர்ச்சியாக சென்னையை சேர்ந்த பிரபல மருத்துவர் ஐஸ்வர்யா என்பவரை தனது மகனுக்கு பேசி முடித்துவிட்டார். ஜுலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இதன் மூலம் பிரபல மருத்துவரான ஐஸ்வர்யா சினிமா இயக்குனர் விஜய்க்கு 2வது மனைவியாகிறார்.