தொடக்கூடாத இடத்தில் தொட்ட செங்கோட்டையன்! ஷாக் அடிக்க வைத்த ஹெச்.ராஜா! தென்மாவட்ட ஜாதி அரசியல்!

பள்ளிகளிலேயே இப்போது ஜாதி வெறி அதிகரித்துவருகிறது. ஒவ்வொரு மாணவனும் தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் வண்ணவண்ண கயிறுகள் கட்டுவது ஃபேஷனாகிவிட்டது. இதனால் வன்முறை ஆங்காங்கே வெடித்தது.


அதனால்தான், பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி, மதங்களை அடையாளம் காட்டும் வண்ண வண்ணக் கயிறுகளைக் கட்டி வருவது தடுக்கப்படவேண்டும்; பள்ளிகளுக்கு அவ்வாறு வரக்கூடாது என்ற கல்வித் துறையின் சுற்றறிக்கை வெளியானது.  படிக்கும் பருவத்திலேயே ஜாதி, மத உணர்வை மாணவர்கள் மத்தியில் ஊட்டுவது எவ்வளவுப் பெரிய விபரீதம்! 

இந்த நிலையில், பி.ஜே.பி., இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழக அரசை மிரட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டனர். குறிப்பாக ஹெச்.ராஜா நேரடியாகவே குறை சொன்னார். அரசு எப்படி ஜாதிக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்று ஆவேசமாக அறிக்கை விட்டார்.

பா.ஜ.க.வே சொல்லிவிட்டதால் உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘‘அதுபோல் சுற்றறிக்கை கல்வித் துறை சார்பில் வெளியிட்டது என் கவனத்துக்கே வரவில்லை; ஏற்கெனவே இருந்த நிலை தொடரும்‘’ என்று கூறியுள்ளார். 

இதைவிடக் கேலிக் கூத்து ஒன்று இருக்க முடியுமா? இந்தத் தலைவர்கள் - ஜாதி, மத அடையாளங்காட்டும் குறிக்கோளோடு, கயிறுகளோடு வரவேண்டும் என்ற கொள்கையை உடையவர்களா?

பழைய நிலை தொடரும் என்றால், எந்தப் பழைய நிலை? அந்தக் காலகட்டம் என்ன? பழைய நிலை என்று சொல்லுகிறபோது மாணவர்கள் இப்படியெல்லாம் வருவது கிடையாதே! சமீபத்தில்தானே இந்த நிலை!

அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்பது ஜாதி, மத சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் ஊட்ட வேண்டும் என்பதுதானா? பி.ஜே.பி., சங் பரிவார்கள் ஒன்றைச் சொன்னால், அதற்குமேல் அட்டியில்லையா? நடுங்குவது நல்லதா? அண்ணா பெயரில் இப்படி ஓர் அடிமை அரசா என்று செங்கோட்டையனை கேள்வி கேட்கிறார்கள்.

பதில் சொல்லுங்க மினிஸ்டரே