ஐபிஎல்லில் இருந்து தோனி ஓய்வு? சேப்பாக்கம் ஊழியர்களுக்கு பிரியா விடை கொடுத்தார்!

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் நம்ம தல தோனி, சேப்பாக்கம் ஆடுகளத்தில் வேலை செய்துவரும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் ஒரு போட்டோவும் எடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ipl போட்டிகளில் இன்னும் ஒரு சில லீக் போட்டிகள் மட்டுமே உள்ளன. அதிலும் சென்னை அணிக்கு ஒரு போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த ஒரு போட்டியும் மொஹாலியில் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியே சென்னை அணி இந்த சீசனில் தனது சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டியாகும். 

ஆகையால் சென்னை ரசிகர்களுக்கு நேற்றைய ஆட்டம் முடிந்தவுடன் டென்னிஸ் பந்துகளை டென்னிஸ் பேட்டால் ரசிகர்களிடம் அடித்து அவர்களை உற்சாகபடுத்தினார். அது மட்டும் இல்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் ஒரு போட்டோவும் எடுத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிகழ்வால் சேப்பாக்கம் மைதானத்தில் வேலை செய்பவர்களை தோனி தன் அன்பை வெளிப்படுத்தி அவர்களை சந்தோச கடலில் மூழ்க வைத்துள்ளார். டோனியின் இந்த செயலை அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேலை சென்னை அணி லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்குமேயானால் பிலே  ஆஃப் சுற்றின் qualifier 1 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்  சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் இன்னொரு போட்டியில் ஆட வாய்ப்பு கிடைக்கும். இப்போதைய நிலவரம் படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தோனி இப்படி மைதான ஊழியர்களுடன் ஏன் திடீரென போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஐபிஎல் போட்டிகளின் அடுத்த சீசனில் அவர் விளையாட மாட்டார் அதனால் தான் என்று சிலர் கூறி வருகின்றனர். அதனை உண்மை என்று கருதம் வகையில் தான் தோனியின் இந்த புகைப்படமும் இருக்கிறது.