மது குடித்தால் நாடு கடத்தும் சட்டம் - MGR கொண்டு வந்ததுமா?

திரைப்படங்களில் மது குடிக்கும் காட்சிகளில் நடிப்பதைக்கூட விரும்பாதவர் எம்.ஜி.ஆர். ஒளிவிளக்கு படத்தில் மட்டும்மது பாட்டிலை கையில் வைத்திருப்பாரே தவிர குடிக்க மாட்டார். இன்று திரும்பிய இடமெல்லாம் டாஸ்மாக் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கு பற்றி கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம்.


தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி காலம் முழுவதும் மது விலக்கு கொள்கை அமுலில் இருந்தது  அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றதும் மதுவிலக்கை ரத்து செய்தால் வருவாய் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர். அதற்கு அண்ணா, ‘’மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம், புழுத்துப்போன நோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்கு சமம்’’ என்று உறுதியுடன் மறுத்தார்

கருணாநிதி ஆட்சி காலத்தில்தான் முதன்முதலாக மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது மதுவின் தீங்கு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் பொறுப்பு, அன்று கட்சியின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்டது.

கருணாநிதி ஆட்சிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அப்போது, 'என் இறுதி மூச்சுஇருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதிஎடுத்துக் கொள்கிறேன்’ என்று 1979-ம் ஆண்டு எம்.ஜி.ஆர்மதுவிலக்கு கொண்டுவந்தார்.

 

மதுவிலக்கை கடுமையாக கடைப்பிடிக்க அவசர சட்டங்கள் பிறப்பித்தார் அதன்படிமுதல் முறை மதுவிலக்குசட்டத்தில் பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று அறிவித்தார்.  இரண்டாவது முறைபிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனைமூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அவசரசட்டம் கொண்டுவந்தார்.

அரசு ஊழியர்களுக்கும் மதுவிலக்கு சட்டப்படி ஆறு மாதம் முதல் ஒரு வருடம் தண்டனை கிடைக்கும்இதில்அமைச்சர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று எம்.ஜி.ஆர்அறிவித்தார்ஆனால் சட்டமாக வந்தபோது அமைச்சர்கள்சேர்க்கப்படவில்லைஅமைச்சர்களும் அரசு ஊழியர்கள் என்று விளக்கம் அளித்தார்.

பின்னர் மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த எம்.ஜி.ஆர்.,, மதுஅருந்துபவர்கள் இனி கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும் அறிவித்தார்மது அருந்த பெர்மிட்அறிமுகப்படுத்தப்பட்டதுபெர்மிட் வயது நாற்பதில் இருந்து 30 ஆக குறைக்கப்பட்டது.

மது விலக்கு அமுல்படுத்தப்பட்ட காலத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமான மக்கள்  தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள்.  தாய்மார்களின் தாலியை அறுக்கும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக  எம்.ஜி.ஆர்மது விலக்கு சட்டத்தை 1981-ம் ஆண்டு  நீக்கினார்.

எம்.ஜி.ஆரால் சாராயக் கடைகள்கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டனமதுபானம் உற்பத்தி செய்வதற்கு தனியாருக்குஅனுமதி வழங்கப்பட்டது. 1983-ம் ஆண்டு டாஸ்மாக் தொடங்கப்பட்டது.

மூன்றாவது முறையாக வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மீண்டும் மதுவிலக்கு கொண்டுவந்தார்இனி எப்போதும் மது தமிழகத்தில் நுழையமுடியாது என்று சொன்னார். அவர் மரணத்துக்குப் பிறகு திமுக மதுவிலக்கைரத்து செய்ததுமுதன்முறையாக மலிவு விலை மது கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுகடுமையானவிமர்சனத்துக்கு ஆளானது.

1991-ம் ஆண்டு மதுவிலக்கு கொண்டுவந்த ஜெயலலிதா, 1992-ம் ஆண்டு பார் வசதியுடன் கூடிய ஒயின் ஷாப்புக்குஅனுமதி கொடுத்தார்.  2002-ம் ஆண்டு டாஸ்மாக் மூலம் மதுபானக் கடைகளை நடத்துவதற்கு ஜெயலலிதா உத்தரவுபோட்டார்காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை ஒயின்ஷாப்கள் செயல்பட்டனஇப்போது தமிழகத்தின் ஒரே வருவாய் ஆதாரம் டாஸ்மாக் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை