காஷ்மீர் விவகாரம்! மக்கள் செல்வன் என்பதை நிரூபித்த விஜய்சேதுபதி! மோடி - அமித் ஷாவுக்கு எதிராக தெறி பேட்டி!

நடிகர் விஜய் சேதுபதி காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.


இந்திய திரைப்பட விழாவானது ஆஸ்திரேலியா நாட்டின் தலைநகரான மெல்பேர்ணில் நடைபெற்று வருகிறது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகர்கள் அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். 

நடிகர் விஜய் சேதுபதி படவிழாவில் செய்தியாளர்கள் அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டனர். 

காஷ்மீர் விவகாரம் பற்றி அவர்கள் கேட்டதற்கு, "மக்களின் குரல்வளையை நெறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும், இதன் பின்விளைவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும்" என்று கூறினார்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் நடிப்பதற்காக அவருக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. 

இதனிடையே, அவர் இந்த படத்தில் நடிப்பதை கைவிட்டு விட்டதாக வதந்திகள் கிளம்பின. நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருந்தன. ஒருவழியாக விஜய் சேதுபதி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.  முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் கண்டிப்பாக நடிக்க போவதாக உறுதி அளித்தார். மேலும் யார் மனதையும் புண்படுத்தாத வாறு இந்த படத்தில் தான் நடிக்கபோவதாக கூறியுள்ளார்.

இந்த பேட்டியானது அரசியலில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.