நினைத்துப் பார்க்க முடியாத வேகம்..! கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்த பேருந்து..! 8 பேர் துடிதுடித்து இறந்த பரிதாபம்!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுற்றுலா பேருந்து ஒன்று சட்டீஸ்கர்- ஆந்திரா மாநிலங்களின் எல்லையிலுள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. நெரடுமில்லி மற்றும் சிந்துரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதிவேகமாக சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து பேருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்து சென்ற வேகத்தில் கவிழ்ந்து உருண்ட இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 10 பேரை பொதுமக்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், எவ்வாறு ஏற்பட்டது காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.