முன்னால் சென்று கொண்டிருந்த லாரி! ஒரே நொடி கண் அயர்ந்த டிரைவர்! சுக்கு நூறாக நொறுங்கிய ஆம்னி பஸ்! பயணிகளுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

சொகுசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவமானது காவேரிப்பட்டணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேவகோட்டை பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சொகுசு பேருந்து ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள போத்தாபுரம் மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது வேகமாக மோதியுள்ளது.

மோதிய அதிர்ச்சியில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. அப்போது அப்பகுதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த இடர்பாடுகள் சிக்கித்தவித்த பேருந்து பயணிகளை காப்பாற்ற முயன்றுள்ளனர். விபத்து அறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள குண்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்ற 56 வயது பயணி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மனைவியும் இதே பேருந்தில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 21 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.