2 மாதத்திற்கு முன்பு சைஸ் 38..! இப்போது சைஸ் 30..! 40 வயதில் சாதித்து காட்டிய அங்கிதா!

இரண்டு மாதத்திற்கு முன்பு வைர இடுப்பு அளவை 38 என வைத்துக் கொண்டு தவித்த அங்கிதா தொடர் முயற்சிகளால் தற்போது 30ஆக குறைத்துள்ளார்.


டெல்லியை சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் அங்கிதா. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இவர் கடந்த 2 மாதங்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இரண்டு மாதங்களாக இவரே பலருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை இவரது இடை அளவு 38ஆக இருந்தது. ஆனால் தற்போது தனது இடை அளவு 30ஆகிவிட்டதாக இரண்டு புகைப்படங்களை அங்கிதா வெளியிட்டுள்ளார். தொடர் முயற்சி மற்றும் திட்டமிடல் இருந்தால் 40 வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம் என்பதை நிரூபித்துள்ளார் அங்கிதா.

தற்போது ஊரடங்கால் ஜிம்மிற்கு செல்ல முடியவில்லை என்றாலும் கூட வீட்டில் செய்ய முடியும் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதாக அங்கிதா கூறியுள்ளார். 40 வயதில் இடை அளவை 8 இன்ச் அளவிற்கு குறைத்துள்ளார் என்றால் அங்கிதா கொண்டாடப்பட வேண்டியவர் தான்.