2வதாக மீண்டும் திருமணம் செய்த தெய்வம் தந்த வீடு சீதாவின் கணவன்..! அவரது புது மனைவி யார் தெரியுமா?

தெய்வம் தந்த வீடு நடிகை சீதாவின் முதல் கணவர் டான் டோனி, தற்போது இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.


தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 

தமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா. இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், தன்னுடைய நெருங்கிய தோழியின் அண்ணனான டான் டோனி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்களும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகினர் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மேக்னாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஆக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றது. சமீபத்தில் மேக்னாவும் அவரது காதல் கணவர் டான் டோமியும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இவர்களது விவாகரத்து வழக்கு முடிந்தவுடனேயே டான் டோனி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரது திருமணம் நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. டான் டோனி , தான் காதலித்து வந்த காதலி டிவைன் கிளாரா மணிமுறியில் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் தீயாக பரவி வருகிறது.