கிடுகிடுவென குறைந்த தங்கத்தின் விலை! இல்லத்தரசிகள் முகத்தில் பொங்கும் உற்சாகம்!

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.


தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்றவை தங்கம் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. 

இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் 31,000/- ரூபாயையும் தாண்டியது.  செப்டம்பர் மாத தொடக்கம் முதல் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.  

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,769 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,152 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,612 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 28,896 ஆகவும் இருந்தது. 

ஆனால் இன்று சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,584 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.28,672 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,741 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 29,928 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 

14.9.2019  - 1 grm – Rs. 3741/-, 8 grm – 29,928/-  ( 24 கேரட்) 

14.9.2019 – 1 grm – Rs. 3584/-, 8 grm – 28,672/- (22 கேரட்) 

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 48.70 ஆகவும் கிலோ ரூ.48,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..