கலைஞர் சிலை திறப்பு! மேடையில் தயாநிதி மாறனை நிற்க வைத்த கனிமொழி!

தி.மு.க தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா மேடையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நிற்க வைத்துவிட்டு தி.மு.க எம்.பி., கனிமொழி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.


   தி.மு.க தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா மேடையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நிற்க வைத்துவிட்டு தி.மு.க எம்.பி., கனிமொழி நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

   தி.மு.கவின் பெரிய நிகழ்ச்சிகள், அதிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் என்றால் அதில் முன்னால் வந்து நிற்பவர் தயாநிதி மாறன். சன் குழுமத்தின் தலைவர் கலாநிதிமாறனின் சகோதரர் என்ற முறையிலும் தி.மு.கவின் முன்னாள் மத்திய அமைச்சர் என்ற வகையிலும், மறைந்த தயாநிதி மாறனின் மகன் என்ற ரீதியிலும் தயாநிதிமாறனுக்கு கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதும் முக்கியத்துவம் உண்டு.

   கடந்த முறை தி.மு.க சார்பில் கலைஞரின் அரசியல் வைரவிழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த விழாவிலும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேசியத் தலைவர்களை வரவேற்று அவர்களை விழா நடைபெற்ற இடத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை தயாநிதி மாறன் தான் ஏற்று இருந்தார்.

   அந்த வகையில் இன்று நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவிலும் அனைத்து வேலைகளையும் தயாநிதிமாறன் முன்னின்று பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் சிலை திறப்பு மேடையில் தயாநிதிமாறனுக்கு நாற்காலி போடவில்லை. முன் வரிசையில் சோனியா, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். பின் வரிசையில் இரண்டே இரண்டு நாற்காலிகள் இருந்தன.

   அந்த இரண்டில் ஒன்றில் துரைமுருகன் அமர்ந்து இருந்தார். மற்றொரு நாற்காலியில் கனிமொழி அமர்ந்திருந்தார். மேடையில் ஏறிய தயாநிதி மாறன் நின்று கொண்டே இருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது. கடந்த காலங்களில் தி.மு.க மேடையில் சிறப்பு கவனிப்புகளை பெற்று வந்த தயாநிதிமாறனுக்கு உட்கார நாற்காலி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

   அதுவும் கனிமொழி மேடையில் நாற்காழியில் அமர்ந்திருக்க அவருக்கு முன்னதாகவே அரசியலுக்கு வந்து மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் நிற்க வேண்டிய நிலை உருவானது. தயாநிதி மாறனுக்கு நாற்காலி இல்லாத நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா, அல்லது எதேச்சையாக நடைபெற்றதாக என்று தெரியவில்லை. ஆனால் விழாவிற்கு வந்திருந்த தி.மு.க நிர்வாகிகளில் பலர் இது குறித்து பேசியபடி சென்றனர்.