மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு மருமகனுடன் தேனிலவு கொண்டாடிய மாமியார்! அதிர வைத்த சம்பவம்!

சொந்த மகளின் கணவரையே தாயொருவர் அபகரித்த சம்பவமானது லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகரை சேர்ந்தவர் லாரென் வால். தன்னுடைய தாயாரின் பெயர் ஜூலி. லாரென் தன்னுடைய 19 வயதில் பால் வைட் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு ஜூலி 15,000 பவுண்டுகளை செலவழித்தார்.

லாரென் தாய் பாசம் மிகுதியானவர் என்பதால் தன்னுடைய தேன்நிலவிற்கும் தாயை அழைத்து சென்றுள்ளார். அப்போதுதான் அவருடைய வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

ஜூலியும் தன்னுடைய மருமகன் என்று பாராமல் பாலுடன் இணைந்து கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார். இருவரும் செல்போன்களின் மூலம் பல அந்தரங்க செய்திகளை பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனிடையே ஜூலியின் மற்றொரு மகள் அவருடைய செல்போனை பார்த்தபோது அதிர்ந்தார்.

செல்போனில் கண்ட அனைத்தையும் உன்னுடைய சகோதரியான லாரெனிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக லாரென் இதுகுறித்து தாயாரான ஜூலியிடம் கேட்க, அவரோ அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி தட்டிக்கழித்துள்ளார்.

ஆனால் அடுத்த சில நாட்களிலேயே யாரிடமும் தெரியாமல் பால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 9 மாதங்கள் கழித்து ஜுலி ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இந்த குழந்தை பால் உடையது என்பதில் லாரெனுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒரு தாய் எப்படி ஒரு மகளின் வாழ்க்கையை சீரழிக்க முடியும் என்ற வேதனையில் லாரென் தவித்து வருகிறார். இதனிடையே ஜூலி பாலை சட்ட முறைப்படி மறுமணம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அவர்களுடைய திருமண விழாவிற்கு என்னுடைய மகளும், பாலின் முன்னாள் மனைவியுமான லாரெனையும் அழைத்துள்ளார்.

தன் கணவர் மற்றும் தாயார் மீது கடும் கோபத்திலுள்ள லாரென் இருவரையும் வாழ்நாள் முழுவதும் மன்னிக்கவே இயலாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.