ஒரே வீடியோவில் ரசிகர்களை மயக்கிய டிவி பிரபலத்திற்கு திடீர் கல்யாணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

டிக்டாக் செயலின் மூலம் பிரபலமடைந்த பிரபல நடன கலைஞரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பது வைரலாகி வருகிறது.


டிக்டாக் செயலி மூலம் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வரும் பல்வேறு நபர்கள் வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வருகின்றனர். மிகவும் அருமையாக நடிக்கும் சிலருக்கும் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

பிரபல நடன கலைஞரின் மகளான சௌபாக்கியா வெங்கடேஷ் டிக்டாக் செயலியில் வீடியோக்கள் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் செயலிலும் அதிகளவில் ரசிகர்களுள்ளனர்.

இவர் தன்னுடைய நெடுங்கால காதலரான அர்ஜுன் சோமசங்கர் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களை சௌபாக்கியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அவருடைய ரசிகர்கள் பலரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் மலையாள திரையுலகில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.