பன்னீர்செல்வத்துக்கு தராசு ஸ்யாம் கேள்வி.! முதல்வர் எடப்பாடியார் இருக்கும்போது, இன்னொருவரை எப்படி முதல்வராக அறிவிக்க முடியும்?

தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், ‘யார் முதல்வர்’ என்று கேள்வி எழுப்புவது குறித்து தராசு ஸ்யாம் வெளியிட்டுள்ள பதிவு இது.


ஜெயலலிதா இயற்கை எய்தி அறுபது நாட்களுக்குப் பிறகு தான் ஓ.பி.எஸ். மெரினா கடற்கரையில் புரட்சிக் கொடியை உயர்த்திப்பிடிததார். அதற்கான காரணக்களை அவரே அப்போது விளக்கியும் உள்ளார். "எனது உள்ளக் குமுறலை, ஜெயலலிதா சமாதி முன்பாக நின்று கொண்டு, நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தி விட்டேன். . ராஜினாமாவை திரும்ப பெறவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன். புதிய கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை

நான் முதன்முறையாக தமிழக முதல்வராக 2001-ஆம் ஆண்டு பதவியேற்ற போதே,சசிகலாவுக்கும் எனக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. சசிகலா பற்றி 10 சதவீத உண்மைகளை வெளியே சொல்லியுள்ளேன். 90 சதவீத உண்மைகளை என்னுடனே வைத்துக்கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் பரவலாக நாட்டு மக்களிடையே உள்ளது. அதை போக்க வேண்டிய கடமை, அரசுக்கு இருக்கிறது என்பதை உணர்கிறேன் என்று கூறியிருந்தார். 

விடுதலைக்குப்பின் சசிகலா மீண்டும் அதிமுகவுக்குள் வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான் இப்போதும் கட்சிக்குள் முண்டுகிறார்கள். அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக முதல் போர்க் குரல் எழுப்பியவர் அதிமுகவின் ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா. தேர்தல் கமிஷனில் முதல் புகார் அளித்தவரும் அவரே. ராஜ்யசபாவிலேயே தனியாளாகக் குரல் கொடுத்தார். தொலைக்காட்சிகளில் வறுத்து எடுத்தார். ஜெயலலிதா கையெழுத்தை யாரும் மோசடியாகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும் என்று கூட ஒரு மனுக் கொடுத்தார். அந்த சசிகலா புஷ்பா இன்று பா. ஜ. வில்.

சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று பின்னர் தேர்தல் கமிஷனில் மனுக் கொடுத்தார் அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி . அவர் இன்று கட்சியில் இல்லை. கட்டக் கடைசியில் வந்தவர் தான் ஓபிஎஸ். சசிகலாவைப் பொதுச் செயலாளராக்கிய தீர்மானத்தில் முதல் கையெழுத்துப் போட்டவரும் அவரே. முதல்வர் பதவி இல்லை என்று ஆன பின்னர் கூட அவர் அடங்கியே இருந்தார். தர்மயுத்தம் துவங்கிய பின் தான் அவர் ஆன்மீக வியூகம் வகுத்தார்.

நடப்பது அதிமுக ஆட்சி. அதன் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஒரு முதல்வர் இருக்கும்போதே இன்னொருவரை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் ஆட்சித் தேர் நின்று விடாதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.