நள்ளிரவு! ஆட்டோவில் ஏறிய நடன மங்கைக்கு டிரைவரால் கிடைத்த விபரீத அனுபவம்! சென்னை அதிர்ச்சி!

பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கத்தியை காட்டி நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவமானது திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருவொற்றியூரில் மேற்கு மாட வீதி என்னுமிடம் உள்ளது. இங்கு சிந்துஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நடன கலைஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புதுவண்ணாரப்பேட்டை சென்றிருந்த இவர், அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்கு ஆட்டோவில் ஏறியுள்ளார். 

கக்கன் ஜி நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநரும் அவருடைய நண்பரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிந்துஜாவை மிரட்டியுள்ளனர். மேலும்  சிந்துஜாவிடமிருந்த நகை, பணம், செல்போன் முதலியவற்றை பறித்துள்ளனர்.

சம்பவம் குறித்து சிந்துஜா திருவொற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளின் மூலம் ஆட்டோ ஓட்டுநர் கிஷோர் மற்றும் அவருடைய நண்பரான ஆசிப் பாஷா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.